இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்வதில் மிகவும் தாமதமாகிவிட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு மத்திய வங்கி ஆளுநர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில், பெற்றோல் மற்றும் டீசல் விலை பாதிப்பு குறைவாகவே உள்ளதென மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகள் பலவற்றின் எரிபொருள் விலை அட்டவணையையும் பதிவிட்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.