ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியும் சேவ் த சில்ட்ரன் அமைப்பின் நன்கொடையுடன் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் கணினி ஆய்வு கூடம் வைபவ ரீதியாக பிரவுன்ஸ்விக் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்ட நிலையத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வுடன் வட்டகொட, கிளாஸ்கோ, டெஸ்போர்டு, கிளனனூர், பூனாகலை மற்றும் யூரி நிலையங்களுக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக இதற்கான அனுசரணை வழங்கிய சேவ் த சில்ட்ரன் அமைப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எமது மாணவர்கள் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி தனது கல்வி நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக கொண்டு செல்லவும் அவர்கள் கற்றல் விடயங்களை இலகுவாக்கவும் இது ஏதுவாக அமையும்.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் முகாமையாளர் அக்ஷரா அவர்கள் மற்றும் இணைப்பாளர் கனிஷ்டா அவர்கள் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்களான திரு சுரேஷ், திரு நித்தியானந்தன் மற்றும் திரு பவித்ரன் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்வுகள், கணினி பயிற்சி பட்டறை மற்றும் திரு அனுஷன் அவர்களின் மலைக் குருவியின் ஆதங்கம் எனும் கவிதை நூலும் வெளியிடப்பட்டது.