உலகம்

“ஈயூநிஸ்” புயலின் மூர்க்கம்இங்கிலாந்தை உலுக்கியது!

இயல்பு நிலை ஸ்தம்பிதம்!
மக்கள் வீடுகளில் முடக்கம்!!

இங்கிலாந்தின் தெற்கு, தென் கிழக்குப் பகுதிகளை மிகப் பலமான புயற் காற்று
தாக்கியிருக்கின்றது. “ஈயூநிஸ்”(Storm Eunice) எனப் பெயரிடப்பட்டிருக்கின்ற
இந்தப் புயலினால் பரவலாகப் பலத்த
சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.வீதிப்
போக்குவரத்துகள், ரயில், விமானப் பயணங்கள் ஸ்தம்பித்திருக்கின்றன.

விமானங்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்குவதற்குத் தள்ளாடுகின்ற காட்சிகளைப் பலரும் சமூக
ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். மணிக்கு 122 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசிய புயற் காற்றினால் மரங்கள் முறிந்தும் கூரைகள் பறந்தும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கான மின் விநியோகம்
துண்டிக்கப்பட்டிருக்கிறது. உலகப் புகழ் பெற்ற லண்டன் ஒ2 கலையக மண்டபத்தின் (O2 Arena) கூரையின் ஒரு பகுதியை புயல் பிய்த்தெறிந்திருக்கிறது.

கடந்த மூன்று தசாப்த காலத்திற்குப்
பின்னர் நாட்டைக் கடக்கின்ற மிகப்
பலமான சூறாவளிக் காற்று இது என்ப
தால் மிக அரிதான சிவப்பு எச்சரிக்கை
(red warnings) விடுக்கப்பட்டிருக்கிறது.
காற்றில் பறந்து வரக் கூடிய பொருள்களால் ஏற்படுகின்ற உயிராபத்துக்ககளைத் தடுப்பதற்காக நடமாட்டங்களைக் குறைத்துக் கொண்டு வீடுகளில் தங்கியிருக்குமாறு பல மில்லியன் கணக்கான மக்களைக் காலநிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இன்று மூடப்பட்டிருக்கின்றன.
வேல்ஸில் சகல ரயில் சேவைகளும்
இடை நிறுத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ்
விமான சேவை நிறுவனம் அதன் பல
சேவைகளை இடைநிறுத்தி உள்ளது.

கடல் அலைகள் மற்றும் புயல் காட்சிகளோடு தம்படம் (selfie) எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கரையோரக் கண்காணிப்புப் பிரிவினர் பொது மக்களை எச்சரித்துள்ளனர். கட்டடங்களின் கூரைகளும் சிதறிய துண்டுகளும் பறந்து தாக்கியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

1987 ஆம் ஆண்டு தாக்கிய மிகப் பெரிய சூறாவளியை(Great Storm)விட இன்றைய புயலின் மூர்க்கம் மிக அதிகம் என்று லண்டன் வாசிகள் கூறுகின்றனர்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன்.
பாரிஸ்.

Related posts

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறந்த செல்வந்தர்கள்

Thanksha Kunarasa

மிகப் பெரிய கஞ்சாத் தோட்டத்தை கைப்பற்றிய ஸ்பெயின் பொலிஸ்!

Thanksha Kunarasa

பிரான்சில் தேசிய ஒற்றுமை அரசு ஒன்றுக்கு தேசிய ஒற்றுமை அரசு ஒன்றுக்கு எதிர்க்கட்சிகள் இணங்கவில்லை! அரசியல் நிலைவரம் குறித்த உரையில் மக்ரோன் தகவல்!

namathufm

Leave a Comment