இலங்கை

பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது குறித்து சுகாதார ஊழியர்கள் இன்று தீர்மானம்!

சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது.அதற்கமைய, அந்த ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழு கூடி இந்த விடயம் குறித்து ஆராயவுள்ளது.சுகாதார அமைச்சு இறுதியாக தங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான ஆவணம், தங்களுக்கு அவசியமாகும் என்றும் அந்த ஆவணம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் சுகாதார தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்

.இதேவேளை, தாதியர், இடைநிலை மற்றும் நிறைவுகாண் சேவை உள்ளிட்ட சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் இருந்து அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் நேற்று விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்கு

Thanksha Kunarasa

ஒமிக்ரோன் பரவலுக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்: அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜயசிங்க

editor

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

Thanksha Kunarasa

Leave a Comment