இலங்கை

வீடு புகுந்த திருடர்களால் 60 பவுண் தங்க நகைகள் திருட்டு!!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை (09.02.2022) திருடிச் சென்றுள்ளனர்.
 
சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில் வந்து, யாழ் கோண்டாவிலிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.அந்த வீட்டுக்காரர்களும், சுவிஸ் குடும்பமும் நேற்று காலையில் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றனர்.

இதன்போது, பெறுமதியான தங்கநகைகள், சேலைகளை அலுமாரிக்குள் மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். மாலையில் வீடு திரும்பினர் அலுமாரியில் பொருட்கள் இருந்த இடம் குழம்பி .ருந்ததை அவதானித்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தேடிய போது, அவை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.இன்றைய சுவிஸ் பிராங் மதிப்பில் 60பவுன் நகைகளும் அன்னளவாக 28, 800 CHF எனக் கூறப்படுகிறது, இச் சம்பவம் சுவிசிலிருந்து யாழ் சென்ற குடும்பத்தாருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவு

Thanksha Kunarasa

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று !

namathufm

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இது தான் காரணம் !

namathufm

Leave a Comment