இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் போட்டிருந்தால் போதுமானது என்பதற்கு, சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதை ஏற்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கையர்கள் கொரோனா தடுப்பூசியின் மூன்று டோஸையும் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு டோஸ் மாத்திரம் போட்டுக்கொண்ட வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதியில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.