இந்தியா

தமிழகத்தில் 5 ஆயிரத்துக்குள் வந்த கொரோனா பாதிப்பு.. ஆட்டம் காட்டும் பலி எண்ணிக்கை..

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று மேலும் 4,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 34,20,505 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 4,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 34,20,505 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்குள் வந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 20,237 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 32,92,559 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இன்று மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 37,809 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நேற்று பலி எண்ணிக்கை 13 ஆக இருந்த நிலையில், இன்று 37 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 37 பேர் உயிரிழப்பு கொரோனா காரனமாக தனியார் மருத்துவமனைகளில் 19 பேரும், அரசு மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் அதிகபட்சமாக தலைநகரமான சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,43,829 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சோதனை இதுவரை 6,27,59,697 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 1,15,898 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 90,137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை மொத்தம் 19,96,177 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 2,675 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பெண்கள் பாதிப்பு பெண்களில் இதுவரை மொத்தம்14,24,290 பேர் பெண்கள் எனவும், இன்றைக்கு மட்டும் 1,844 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 38 திருநங்கைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருநங்கைகள் இன்று யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு நிவாரணம் வழங்கிய தமிழக யாசகர்!

Thanksha Kunarasa

7 பேர் விடுதலை ! தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்!

namathufm

அசானி புயல் அந்தமானுக்கு மட்டுமில்லை, தமிழகத்திற்கும் தான்: வானிலை ஆய்வு மையம்

Thanksha Kunarasa

Leave a Comment