திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீடுகள்.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்குமான மாவட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதேசம் ஆகியவற்றின் பாரபட்சமற்ற வகையில் அமைய வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் மக்களால் தெரிவு செய்யப் படுபவர் தேர்தல் காலத்தில் மட்டும் ஆங்காங்கே தலையை காட்டி வாக்கு கேட்டு வென்ற பின் அந்த மக்களை திரும்பிப் பார்க்காத சூழல்தான் நிலவுகிறது.
மூதூர் பிரதேச தமிழ் மக்களையும் பிரதி நிதித்துவப் படுத்துபவர்தான் திருகோணமலை மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர். மூதூர் பிரதேச தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பல.
1.நில ஆக்கிரமிப்பு
2.இயற்கை வளங்கள் சூறையாடல்
3.தமிழர் தொல்லியல் தடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாதல்.
4.அரச அதிகாரிகளின் அலட்சிய மனப் பான்மை
5.பாட்சாலைகளில் ஆசிரிய வளப் பற்றாக்குறை.
6.பாடசாலைகளில் பெளதீக வளங்களின் பொதாமை.
7.வறுமை வேலை வாய்பின்மை
8.விவசாய நடவடிக்கைகளுக்கு வேண்டிய ஆதார உதவிகள்.
9.தங்கள் பிர்ச்சனைகளை முறையிட பாராளுமன்ற உறுப்பினரோ அவர் அலுவலகமோ சரியான முறையில் இயங்காமை .
10.போதிய தமிழ் அரச அதிகாரிகள் இல்லாமை.
10.மூதூர் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான.மூதூர் தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு,பிரதேச சபை,தனியான கல்வி அலுவலகம் இவற்றில் எந்தவிதமான முன்னெடுப்புகளும் எடுக்கப் படாமை.
கடந்த இரண்டாண்டுகளில் திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீடுகள் நகரத்தை மையப் படுத்தியே உள்ளன மூதூர் தமிழ் கிராமங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப் பட்டுள்ளன.
யாரும் கேட்பார் பார்ப்பார் இன்றி கையறு நிலையிலேயே மூதூர் தமிழ் மக்கள் உள்ளனர்.கடந்த காலங்களில் யுத்த அழிவுகளால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் இன்று நிர்க்கதியற்ற நிலையிலேயே வாழ்கின்றனர்.
மக்களின் அடிப்படைத் தேவகள் கவனிக்கப் படாமலே உள்ளன இவற்றில் கவனம் கொள்வதற்கான எந்த நடவடிக்கைகளும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப் படவில்லை. வெறும் உணர்வும் உணர்ச்சியும் மக்களின் வயிற்றை நிரப்பி விட முடியாது.அவர்கள் தேவைகளை நிறைவேற்றி விட முடியாது.
இன்றைய சூழ் நிலையில் யார் தங்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் என்பதே மறந்து போய் விட்டதாக மக்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
யாருக்கோ இன்று பிறந்த நாளாம் யாரொடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம்