அஞ்சலி இந்திய இசையின் உலக அடையாளமாய் ஒலித்து செவிகளில் தேன் வார்த்த குரல் இன்று ஓய்ந்து போனது. இந்திய சினிமாவில் பல மொழிகளிலும் வசீகரம் மிக்க குரலால் கட்டிப் போட்ட கானக்குயில் இசைக்க மறந்து போன நாள் இன்று.
இசை என்பது மொழி கடந்தது என்பதை தன் குரலால் உலகம் முழுவதும் நிரூபித்து நின்ற மேதமை மிகு இசையரசி லதா மங்கேஸ்கர்.
தமிழில் அவர் குரல்,மொழிமாற்றப்படங்களில் மட்டும் ஒலித்ததை தாண்டி , 1987 ஆம் ஆண்டு பிரபுவின் “ஆனந்” படத்தின் மூலம் இளையராஜா தமிழுக்கு கொண்டு வந்தார் .ஆராரோ ஆராரோ…எனத் தொடங்கும் அந்தப் பாடல் காதல் தாலாட்டாய் அந்த நாளில் இளம் உள்ளங்களின் கனவுப் பாடலாய் கட்டிப் போட்டது.
லதாவின் பஜன் பாட்ல்கள் கண்ணை மூடிக் கொண்டு ரசிப்பின் உச்சங்களை தொட்டு நிற்கும் வேறு ஒரு உலகத்துக்குள் பிரவேசிக்க வைக்கும். வாழ் நாள் முழுவதும் இசையாய் வாழ்ந்த இசைப் பேரரசி 1929 ல் பிறந்து இன்று 2022 வரை தொண்ணூற்றி மூன்று வருடங்கள் நிறைவான வாழ்வு வாழ்ந்த இசை மேதைக்கு அஞ்சலிகள்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடிய “ஜியா ஜலே…ஜா ..ஜலே ” பாடல் உயிரை அறுத்துக் கொண்டு உணர்வுப் பெருக்கு நிறைந்த குரலாய். இந்திய திரையுலகில் முப்பதாயிரம் பாடல்கள கடந்த சாதனை.
பால.சுகுமார்(சேனையூர்-லண்டன்)
மேனாள் புல முதன்மையர்
கலை கலாசார புலம்
கிழக்குப் பல்கலைக்கழகம்