விளையாட்டு

U-19 கிரிக்கெட் உலககோப்பை இறுதிப் போட்டி – இங்கிலாந்து VS இந்தியா மோதல்

ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் (Toss) வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது. நேற்று மழை பெய்ததால் ஆடுகளம் ஒரு அளவிற்கு ஈரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி டாஸ் இழந்தாலும், விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினால் அது பெரும் சாதகமாக அமையும். இந்த மைதான ஆடுகளத்தை ஆய்வு செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சாமுவெல் பத்ரி, ஆடுகளம் ஓட்டக் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை தரும் விதமாக மைதானம் இருக்கும் என்று கணித்துள்ளார். விக்கெட்டுகளை விரைவில் எடுத்தால் தான் பந்துவீசும் அணி வெற்றி பெற முடியும் என்று அவர் கூறினார். சாமுவேல் பத்ரியின் கணிப்பு சரியாக இருக்குமா என்று போக போக தான் தெரியும். இதனால் இங்கிலாந்து அணியை 200 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் முதல் முறையாக இந்திய அணி விளையாடுவதும் கொஞ்சம் பாதகமாக பார்க்கப்படுகிறது. மழையும் குறுக்கிடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் ஆடும் ,
இந்திய அணியின் வீரர்கள் 1,ஆங்கிரிஷ், 2, ஹர்னூர் சிங், 3,ரஷித், 4, யாஷ் துல், 5, நிஷாந்த் சிந்து, 6, தினேஷ் பானா, 7, ராஜ் பவா, 8, ஹங்கர்கேகர், 9, ரவிகுமார், 10,கௌசல் தாம்பே, 11, விக்கி ஆஸ்ட்வால்.

இங்கிலாந்து அணியின் வீரர்கள் 1, ஜார்ஜ் தாமஸ், 2,ஜாக்கப் பெத்தஃப, 3, டாம் பிரஸிட், 4,ஜேம்ஸ், 5, வில்லியம், 6,ஜார்ஜ் பெல், 7. ரஹ்மான் 8,அலெக்ஸ் 9.செல்ஸ் 10, தாமஸ், 11, ஜோஸ்வா

Related posts

ஆசியக் கிண்ணத்தை வென்ற வீரர்களுக்கு மதிப்பளிப்பு !

namathufm

ரொனால்டோவின் ‘லிவ் இன் டு கெதர் ’ உறவுக்கு ஷரியா சட்டத்தில் விலக்கு தருமா சௌதி?

namathufm

உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச்சின் விசாவை இரத்துச் செய்தது அவுஸ்ரேலியா!

editor

Leave a Comment