இலங்கை

போலிச் செய்தி வெளியிட்டதாக கூறி தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளை பல பிரதேசங்களிலும் எரித்து “கிழக்கின் கேடயம்” அமைப்பினர் எதிர்ப்பு.

தொடர்ந்தும் ஊடக மதிப்பை கெடுத்துக்கொண்டு பொய்யான செய்திகளை வெளியிட்டுவருவாதகத் தெரிவித்து தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளை எரித்து பல பிரதேசங்களிலும் “கிழக்கின் கேடயம்” அமைப்பினர் தனது எதிர்ப்பை வெளியிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இது விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, திருகோணமலை பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைக்கு நடந்த அநீதியை முற்றாக மறைத்து தாக்கியவரை அப்பாவி போன்றும், தாக்கப்பட்டவரை தாக்கியவராகவும் செய்தி வெளியிட்டதுடன் நடக்காத பல சம்பவங்களை நடந்ததாக பொய்யான செய்திகளை வெளியிட்டிருந்ததாக கூறியே தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளை “கிழக்கின் கேடயம்” அமைப்பினர் எரித்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

சமூகவலைத்தளங்களிலும், முஸ்லிம் சமூகத்தாரிடமும் பலத்த கண்டனங்களை பெற்றுவரும் தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகள் தொடர்ந்தும் போலியான பக்கசார்பான செய்திகளை வெளியிடக்கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்களின் பக்க நியாயத்தை கேட்காமல் செய்தியை பிரசுரித்த பத்திரிகைகள் தமது தவறை உணர்ந்து பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் “கிழக்கின் கேடயம்” அமைப்பினர் இதன் போது காணொளியூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Related posts

8500 தொன் எரிவாயு விரைவில் கிடைக்கும் – லிட்ரோ நிறுவனம்!

Thanksha Kunarasa

ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

Thanksha Kunarasa

பங்களாதேஷை சேர்ந்த பிக்கு கடத்தப்பட்டார்

Thanksha Kunarasa

Leave a Comment