இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி – கையெழுத்து போராட்டம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ் தலைமையில் கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான டிவனியாவின் மகளும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஒப்பமிட்டிருந்தார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் தாக்கம் தொடர்பில் உரையாற்றியிருந்தனர்.

Related posts

ஒமிக்ரோன் பரவலுக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்: அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜயசிங்க

editor

சர்வதேச கபடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கௌரவிப்பு

Thanksha Kunarasa

இந்திய வெளிவிவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு

Thanksha Kunarasa

Leave a Comment