ஆட்சிக்கு வரும் முன்பு தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில்பலாஜி கொடுத்த வாக்குறுதிகள் எங்கே போனது எனவும், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏராளமான வாக்குறுதிகளை திமுகவினர் கொடுத்தார்கள் ஆனால் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சரும் கரூர் அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் அருகே உள்ள கோடங்கிப்பட்டி பட்டாளம்மன் ஆலயத்தில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தினை தொடங்கினார்.
கோயிலில் வழிபாடு நிகழ்த்திய பின்னர் திறந்த வெளி பிரச்சாரத்தில் தேர்தல் பிரச்சாரத்தினை துவக்கிய அவர், பேசுகையில், இந்த நகரமைப்பு தேர்தலை நீதிமன்றத்தினை நாடி எப்படியாவது, நிறுத்த வேண்டுமென்று நினைத்தார்கள், ஆனால் உச்சநீதிமன்றமே தேர்தலை நடத்த வேண்டுமென்று உத்திரவு போட்டுள்ளது என்றார்.