இலங்கை உலகம்

சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் நேற்று போராட்டங்கள்

பிரித்தானியாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் இனவழிப்பு தூதுவராலயத்திற்கு முன்பாக மிகப்பெரும் போராட்டத்தை தமிழ்த்தேசிய அரசியற் செயற்பாட்டாளர்களுடன் தமிழ் மக்களும் இணைந்து சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கெதிரான கண்டனக் கோசங்களையும் பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதில் பிரதான கோசங்களாக ஒற்றையாட்சிக்கெதிராகவும் இனவழிப்பிற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரித்தும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி கையெழுத்திட்டவர்களைக் கண்டித்தும் கொட்டொலிகளை எழுப்பிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை சர்வதேசமே அங்கீகரி என்ற தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஓங்க ஒலித்தார்கள்.

Related posts

அமெரிக்காவில் 430 அடி உயர ராட்டினத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி

Thanksha Kunarasa

“இலங்கையர்களுக்கு சோறு வழங்கும் தந்தையாக மாறிய சீன ஜனாதிபதி”

namathufm

பாப்பரசரை நேரில் சந்தித்தார் பேராயர்

Thanksha Kunarasa

Leave a Comment