இலங்கை

இலங்கையில் இடம் பெறும் சித்திரவதைகள் தொடர்பான அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம் – பிரிட்டன்.

இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல்வன்முறைகள் குறித்து சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மோசமடைந்து வரும்மனித உரிமைகள் நிலவரம் குறித்து கடும் கரிசனைகளை வெளியிட்டுள்ளோம் எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டோனியா அன்டோனியாசி எழுப்பிய கேள்விக்கு வழங்கியுள்ள எழுத்துமூல பதிலில் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அமன்டா மில்லிங் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சமீபத்தைய விஜயத்தின் போதுஅமைச்சர் தாரிக் அகமட் இலங்கை தலைவர்களுடன் இந்த விவகாரங்கள் குறித்து இலங்கை தலைவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரங்களின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் பிரிட்டனிற்கான இலங்கைத் தூதுவருடனும் இலங்கை வெளிவிவகார அமைச்சருடனும் பல தடவை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார், இலங்கைக்கு ஜனவரி18 ம் திகதி முதல் 20 திகதி வரை மேற்கொண்ட விஜயத்தின் போது ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சர் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களை சந்தித்த வேளை மோசமடைந்து வரும் மனித உரிமை குறித்து அவர் கேள்வி எழுப்பினார் என அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 26ம் திகதிவெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசினை சந்தித்த வேளை வெளிவிவகார அமைச்சர் இது குறித்து கேள்வி எழுப்பினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையினால் ஆணைவழங்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் மனித உரிமைகள் பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளிற்கு நாங்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என பிரித்தானிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறிலங்காவுக்கு  இந்தியா பாரிய  உதவிகளை வழங்குவது சாத்தியமில்லை – முன்னாள் இந்திய தூதுவர்

namathufm

ஆர்ப்பாட்டக்களத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

Thanksha Kunarasa

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு .

Thanksha Kunarasa

Leave a Comment