உலகம்

கொரோனா வைரஸுடன் ஐரோப்பா ” போர் நிறுத்தம்” .. !

நிரந்தர அமைதிக்கு வழி கிட்டும்
என்கிறது உலக சுகநல அமைப்பு

இது உக்ரைன் போர் விவகாரம் அல்ல.
பெருந்தொற்று நோயுடன் தொடர்புடைய
விடயம்.

கொரோனா வைரஸுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சுகாதாரப் போர் புரிந்துவந்த ஐரோப்பிய நாடுகள்
ஒரு”போர் நிறுத்த “காலப்பகுதிக்குள் பிரவேசித்துள்ளன.அது நிரந்தரமான அமைதி- ஆறுதலை – நோக்கி நம்மை
அழைத்துச் செல்லும், உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதி
காரி ஒருவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

டென்மார்க் ஐரோப்பாவில் முதலாவது
நாடாக “கோவிட்” கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியது. தொடர்ந்து நோர்வே,சுவீடன், சுவிற்சர்லாந்து எனப் பல நாடுகளும் மாஸ்க் முதற்கொண்டு சகல சுகாதார விதிகளையும் முடிவுக்குக் கொண்டு வருகின்றன.

இதனையே தொற்று நோயுடன் “போர்
நிறுத்தம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிரிவின் பணிப்பாளர் ஹான்ஸ் குளுகே (Dr Hans Kluge)வர்ணித்திருக்கிறார். அதி உச்ச அளவிலான தடுப்பூசி, பனிக் காலத்தின் முடிவு ஒமெக்ரோன் திரிபின் மென்மையான தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்டே அவர் ஓர் “ஆறுதலான காலம் உருவாகும்” என்ற நம்பிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

ஐரோப்பா எங்கும் கடந்த வாரம் 12 மில்லியன் புதிய தொற்றுக்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அவசர சிகிச்சை பெற வேண்டியோரின் எண்ணிக்கையில் ஒரு துளி கூட அதிகரிப்பு அவதானிக்கப்படவில்லை. ஒமெக்ரோன் வைரஸ் திரிபின் மென் வலுவே அதற்குக் காரணமாகும் என்று கூறுகின்ற மருத்துவ நிபுணர்கள்,
தொற்று நோய்க்கு எதிரான போரில் ஒரு
“போர் நிறுத்தம்” உருவாக ஒமெக்ரோன்
வழி வகுத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன்.
பாரிஸ்.

Related posts

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

Thanksha Kunarasa

பிரான்ஸின் பெண் பிரதமராக எலிசபெத் போர்ன் நியமனம் !

namathufm

உக்ரைன் மோதலில் எவருமே வெற்றியீட்டப் போவதில்லை – பிரதமர் மோடி !

namathufm

Leave a Comment