கொரோனா தடுப்பூசிகள் மூன்றையும் பெற்றுக் கொண்டுள்ள நபர் கொரோனா தொற்றுக்குள்ளானால் அவர்களினால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு மிகவும் குறைவு என கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்தியர் நதீக ஜானகே தெரிவித்துள்ளார்.
முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான ஏழு நாட்களுக்குப் பிறகு, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்கவும், தினசரி கடமைகளைச் செய்யவும் அனுமதிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.