உலகம் பிரான்ஸ் செய்திகள்

பிரான்ஸ் மூதாளர் இல்லங்களில் பராமரிப்பில் பெரும் முறைகேடா?விசாரணை நடத்த அரசு உத்தரவு

பிரான்ஸில் ஓய்வூதியர்கள் மற்றும் வயோதிபர்களைப் பராமரிக்கின்ற
நலன் காப்பகங்களில் சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் இடம்
பெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அது தொடர்பில் இரண்டு உள்ளக விசாரணைகளை நடத்துமாறு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் வெளியிட்ட நூல் ஒன்றில், மூதாளர் தங்ககங்களில் காணப்படுகின்ற பராமரிப்புக் குறைபாடுகள் பற்றிய பல ஆதாரங்கள் அம்பலமாகியிருந்தன. உணவு, உடை, மற்றும் சுகாதாரப் பராமரிப்புகளில் பெரும் குறைபாடுகள் காணப்படுவதை அந்த நூல் வெளிச்சமிட்டுக் காட்டியமை நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“கல்லறை வெட்டுவோர்” (“Les Fossoyeurs”) என்ற பெயரில் பத்திரிகையாளர் விக்ரர்காஸ்ரனே (Victor Castanet) வெளியிட்ட அந்த நூலில், தங்கள் வயோதிபப் பெற்றோர்களை பராமரிப்புக்காக ஒப்படைத்த பலர், அவர்கள் அங்கு நடத்தப்படுகின்ற விதம் குறித்துப் பல சாட்சியங்களை வழங்கியிருக்கின்றனர்.

பராமரிப்பு நிலையங்களில் திரட்டப்பட்ட
புலனாய்வு ஊடகத் தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டு தனக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்குவதற்கு அந்த நிறுவனம் பேரம் பேசவும் முயற்சித்தது என்ற தகவலை அந்தப் பத்திரிகையாளர் வெளியிட்டிருக்கிறார்.

பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்க்கின்ற Orpea என்னும் மூதாளர் பேணும் நிறுவனத்தின் கீழ் செயற்படுகின்ற நூற்றுக்கணக்கான நிலையங்களிலேயே இவ்வாறு பராமரிப்புக் குறைபாடுகள்
நிலவுவதாக அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமானத்தை அதிகரிப்பதற்காக வயோதிபர்களது பராமரிப்புச் செலவுகள் குறைக்கப்பட்டு அவர்கள் கீழ்த்தரமாக நடத்தப்பட்டு வருகின்றனர் என்று குற்றச் சாட்டுகள் கிளப்பப்பட்டுள்ளன.

பராமரிப்பு நிலையங்களில் திரட்டப்பட்ட
புலனாய்வு ஊடகத் தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டு தனக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்குவதற்கு அந்த நிறுவனம் பேரம் பேசவும் முயற்சித்தது என்ற தகவலையும் அந்தப் பத்திரிகையாளர் வெளியிட்டிருக்கிறார்.

முதலில் இந்தக் குற்றச்சாட்டுகளை
மறுத்த Orpea நிறுவனம், பின்னர் அதன்
பிரதான முகாமையாளர் ஒருவரைப்
பதவியில் இருந்து நீக்கியுள்ளது. நிறுவனத்துக்கு எதிராக அதன் நிதி முகாமைத்துவம், நிர்வாகம் ஆகிய இரண்டு
பிரிவுகளில் தனித்தனியே இரு விசாரணைகளை நடத்துமாறு அரசு உத்தரவிட்டிருக்கிறது. Orpea நிறுவனம் உலகெங்கும் சுமார் ஆயிரத்து 200 மூதாளர் பராமரிப்பு நிலையங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் சுமார் 350 நிலையங்கள் பிரான்ஸில் இயங்குகின்றன.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன் பாரிஸ்.

Related posts

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு

Thanksha Kunarasa

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஜோ பைடன்.

namathufm

நாடாளுமன்றில் வெற்றியீட்டினால்ஆகக் குறைந்த சம்பளம் 1,500 ஈரோ!

namathufm

Leave a Comment