பதுளை சுகாதார பிரிவில் நேற்றைய தினம் (31/01) 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் ஹாலிஎல பகுதியில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கு PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதுளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் – ராமு தனராஜா