மலையக அரசியல் அரங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு –
நுவரலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் அநீதிக்கு எதிராகவும் நியாய கோரிக்கையை முன்வைத்தும் மலையக அரசியல் அரங்கம் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுத்த பொதுமக்கள் மனு கையெழுத்துகள் மாவட்டச் செயலாளருக்கு கையளிக்கப்பட்டதை அடுத்து, இரண்டாம் கட்டமாக மனித உரிமை மீறல் கோணத்திலும் இந்த விடயத்தை முன்கொண்டு செல்லும் வகையில் இன்று காலை 11:30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலயா மாவட்ட நாடாளும்னற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ், அரங்கத்தின் செயலாளர் நா. கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த முறைப்பாட்டினை மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளனர்.