இலங்கை

இளநீர் குடித்த நபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

பலாங்கொடை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு இளநீரில் மயக்க மருந்தை ஊற்றிக் கொடுத்து தங்க சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பலாங்கொடை நகரில் இலிருந்து பெல்மடுல்ல நோக்கி முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த நபர் ஒருவர் ஹொரகெட்டிய என்ற இடத்தில் வண்டியை நிறுத்துமாறு கோரி இவ்வாறு தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார்.

பயணத்தின் போது இடைநடுவே முச்சக்கர வண்டியை நிறுத்த சொன்ன பயணி அங்கு இளநீர் விற்பனை செய்த நபரிடம் இளநீர் இரண்டை வாங்கி ஒன்றை முச்சக்கர வண்டிச்சாரதிக்கு வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தும் முச்சக்கர வண்டியின் சாரதி வைத்தியசாலையில் மயக்கத்திலிருந்து மீண்ட பின்னரே நினைவுக்கு வந்துள்ளது.

இளநீரை அருந்திய பின் தனக்கு மயக்க நிலை ஏற்பட்டதாகவும், நடந்த எதனையும் அறியாத சாரதி பிரதேச மக்கள் சிலர் தன்னை வைத்தியசாலையில் சேர்த்த சம்பவத்தை பின்னரே அறிந்துள்ளார். முச்சக்கர வண்டியின் சாரதி நடந்த விடயங்கள் தொடர்பிலும் தனது கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ள விடயத்தையும் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

Thanksha Kunarasa

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம்.

Thanksha Kunarasa

இலங்கை மக்களிடம் கோரிக்கை

Thanksha Kunarasa

Leave a Comment