இலங்கை

ஹப்புத்தளையில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்.

ஹப்புத்தளை உணவகம் ஒன்றில் கடமை புரிந்து வந்த பெண்மணி ஒருவர் இன்று மாலை (31/01) கடமை முடிந்து வெளியே வரும் போது தனது கணவனால் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டுள்ளார். தெமோதர உடுவர பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளார்.

மனைவி கடமை புரியும் ஹப்புத்தளை நகரில் உள்ள உணவகத்திற்கு வருகை தந்த கணவன் உணவகத்துக்கு சென்று மனைவியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் போது மனைவியை கடமை முடிந்து வெளியே வரும் போது உன்னை நான் கத்தியால் குத்துவேன் என்று கூறிவிட்டு வெளியே வந்த கணவன் மனைவி கடமை முடிந்து வெளியே வரும் வரை காத்துக் கொண்டு இருந்துள்ளார். கணவன் கூறியதை பொருட்படுத்தாமல் வந்த மனைவி மீது கணவர் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்த பெண்மணி அயலவர்களின் உதவியுடன் தியத்தலாவ வைத்தாயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். சந்தேக நபரை ஹப்புத்தளை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் – ராமு தனராஜா

Related posts

கணனி கட்டமைப்பில் கோளாறு – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவை முடக்கம் !

namathufm

கலவரம் குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

Thanksha Kunarasa

‘நோ ஃ.பையர் ஸோன்” ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் – கெலம் மக்ரே

namathufm

Leave a Comment