இலங்கை

பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்துகாதேவி மதிப்பளிக்கப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி பாக்கிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இந்த இந்துகாதேவிக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கரிப்பட்ட முறிப்பு புதியநகர் கிராமத்தில் நடைபெற்றது. கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நோக்கில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றினை ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த வகையில் காலை 11 மணிக்கு புதிய நகர் புதிய சூரியன் விளையாட்டு மைதானத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் புதிய சூரியன் விளையாட்டு கழகம் என்பன இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் நா.குகேந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

தங்கம் வென்ற இந்துகாதேவி வீட்டில் இருந்து உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானம் வரை இந்துகாதேவி மற்றும் அவருடைய தாயார்,அம்மம்மா, அம்மப்பா மற்றும் விருந்தினர்கள் கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்ளின் முழவு வாத்திய அணிவகுப்பு மரியாதையையுடன் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் பின் தங்கிய கிராமத்தில் இருந்து தனது திறமையினை வெளிக்காட்டிய மாணவிக்கு பலர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளதுடன் விருதுகளையும் பணப்பரிசில்களையும் வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

கடந்த 18 ம் திகதி பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இடம்பெற்ற இரண்டாவது பாகிஸ்தான் சிறீலங்கா சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணிசார்பில் பங்கேற்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி என்ற யுவதி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் ச.தவசீலன்.

Related posts

எரிபொருளுக்காக காத்திருந்த லொறி மோதியதில் முதியவர் பலி

Thanksha Kunarasa

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்

Thanksha Kunarasa

இந்தியா – இலங்கை இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Thanksha Kunarasa

Leave a Comment