நாவற்குழியில் பேருந்தில் இருந்து இறங்கிய பெண் தடுமாறி விழுந்ததில் பேருந்தின் சில்லு தலை மீதேறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். (30.01.2022) நேற்று ஞாயிறு முற்பகல் வேளை இடம்பெற்ற இந்த விபத்துக் குறித்து மேலும் அறியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் ஏ-9 வீதி, நாவற்குழி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.
அங்கு இறங்கிய பெண் வீதியோரமாக இருந்த மண்பிட்டியில் கால் வைத்த போது கால் தடுமாறி வீதியில் விழுந்துள்ளார். குறித்த பெண் வீதியில் விழுந்ததை கவனிக்காத பேருந்து அங்கிருந்து புறப்பட்டபோது, அதன் பின்பக்க சில்லு தலைமீதேறியது. இதில் அந்தப் பெண் தலை நசியுண்டது. அங்கிருந்து, வாகனம் ஒன்றின் மூலம் அந்தப் பெண்ணை சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.