ஸ்டாலினின் கட்டுப்பாட்டால் பலருக்கு வாய்ப்பு. திமுகவில் அமைச்சர்கள்,
எம்.எல்.ஏக்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளின் குடும்பத்தினர் உள்ளூட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என முதல்வர் கட்டுப்பாடு விதித்துள்ளார். இதனால் புதிதாக பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளூராட்சித் தேர்தல் பெப் 19 இல் நடைபெற உள்ளது. 2 நாட்களாக வேட்புமனு பெறப்படுகிறது. பெப் 4 வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாள். இதனால் கூட்டணிப் பேச்சு, வேட்பாளர்கள் தேர்வில் கட்சியினர்
தீவிரம் காட்டி வருகின்றனர். பல ஊர்களில் மேயர், துணை மேயர், நகராட்சி,
பேரூராட்சித் தலைவர், மண்டல தலைவர்கள் உட்பட முக்கிய பதவிகளைப் பிடிக்க கட்சி நிர்வாகிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந் நிலையில் தி.மு.கவில் முக்கிய நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முதல்வர் பிறப்பித்த உத்தரவு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகக் கட்சியினர் தெரிவித்தனர்.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் காணொளி வாயிலாக ஆலோசனை செய்தார். அப்போது அமைச்சர்கள்,
எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வாக்காளர்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்கிவிடும் என முதலமைச்சர் உத்தர விட்டிருக்கின்றார்.