இலங்கை

விரைவாக பூஸ்டர் தடுப்பூசி …! சிறிலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா.

நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக சிறிலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

விசேட தடுப்பூசி திட்டம் ஒன்று அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்தார். தியத்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அண்மைய நாட்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுங்கள். “கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களில் கோவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இராணுவத்தின் தலைமையில் ஆயுதப்படையினரை களமிறக்கி ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்காக சிறப்பு நிலையங்களை நிறுவியுள்ளோம். அடுத்த 2 வாரங்களில் நடமாடும் வாகனங்களில் தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கிறோம் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் – மைத்திரிபால சிறிசேன

Thanksha Kunarasa

சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இராஜினாமா

Thanksha Kunarasa

யாழில் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

Thanksha Kunarasa

Leave a Comment