இலங்கை

ஏழு மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இருந்து நேற்று (28) மாலை குறித்த சிறுவன் தவறி விழுந்துள்ளார்.இதில், படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்கு

Thanksha Kunarasa

அடுத்தவாரம் புதிய அமைச்சரவை

Thanksha Kunarasa

பெற்றோல், டீசல் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment