பதுளை பிராந்தியத்தில் நேற்றைய நாள் (27/01) 63 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வகையில்,
பதுளை 19, பண்டாரவளை 06, எல்ல 01, ஹாலிஎல 07, ஹப்புத்தலை 01
கந்தகெடிய 03, லுணுகலை 01, மஹியங்கனை 03, பசறை 01
சொரணாதொட 10, வெளிமடை 01, ஊவபரணகம 10 ஆகிய பகுதிகளில் மொத்தமாக 63 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் இவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கு PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதுளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் – ராமு தனராஜா