இலங்கை

கொத்மலை ரம்பொட பூனாஓயாவில் ஆணின் சடலம் மீட்பு!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை ரம்பொட தோட்டத்தில் உள்ள கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் இன்று ஆணின் சடலம் ஒன்று காலை 11.45 மணியளவில் மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். சடலமொன்று குறித்த ஓயாவில் இருப்பதை கண்ட பிரதேசவாசிகள் கொத்மலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஓயாவில் எரிந்து சென்றார்களா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 40ற்கும் 50ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க ஆண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(செய்தி – க.கிஷாந்தன்)

Related posts

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

Thanksha Kunarasa

சிமெந்தின் விலையும் அதிகரிப்பு!

Thanksha Kunarasa

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் பலி

Thanksha Kunarasa

Leave a Comment