டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் வஉசி, வேலுநாச்சியார், பாரதியார் உள்பட ஒரு சிலரின் அணி வகுப்பு ஊர்வலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் தமிழகம் முழுவதும் அவ் அலங்கார அணிவகுப்பு ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து அதை நடைமுறைப்படுத்துகின்றது.