நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கந்தப்பளை ,எஸ்கடேல், பிலக்பூல், ருவன் எலிய, மீபிலிமான ஆகிய பிரதேசங்களில் நுவரெலியா பிரதேச சபையின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.
அதாவது டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் இவ்வேலைத்திட்டமானது தொடர்ச்சியாக நுவரெலியா பிரதேச சபையின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய தினம் குறித்த இடங்களில் பாதை ஓரங்களில் உள்ள குப்பைகளை அகற்றி ஒரு சுத்தமான சூழலை உருவாக்குவோம் என்ற எண்ணக்கருவுக்கு அமைவாக நுவரெலியா பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டார்கள்.
செய்தி – செ.திவாகரன்