இலங்கை

ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கக் கோரியும் அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனி !

ஒற்றையாட்சிக்கு உட்பட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் என்பதை வெளிப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி நேற்று இரவு வவுனியாவை கடந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 கட்சிகள் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இந்தியாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் யாழ்ப்பாணம் நல்லூரடியில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.
இதனை முகமாகத் தமிழ் மக்களின் நீண்டகால வலுசேர்க்கும் அபிலாசைகளான சமஷ்டி தீர்வை வலியுறுத்தியும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கக் கோரியும் அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனி ஒன்று நேற்று மாங்குளம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பவனி மல்லாவி, விடத்தல் தீவு, மன்னார் ஆகிய பகுதிகளுக்குச் சென்று நேற்று வவுனியாவை வந்தடைந்தது . பின் இன்று காலை வவுனியா நகரிலிருந்து புறப்பட்டு முல்லைத்தீவு நோக்கிச் சென்று அங்கிருந்து கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.

Related posts

ஏழு மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

namathufm

உக்ரைன், ரஷ்யா போன்று இலங்கையிலும் மோதல் ஏற்படும்! – தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை

Thanksha Kunarasa

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுனர்

Thanksha Kunarasa

Leave a Comment