பாணந்துறை – கேதுமதி வைத்தியசாலைக்கு முன்பாக, உயிர்காப்பு வண்டி சாரதி மீது, அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேக நபர்கள், சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்த்துறையினர் குறிப்பிடுகின்றனர். இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிர்காப்பு வண்டி சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும், வண்டிக்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு உந்துருளிகளில் வருகை தந்த நால்வரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பாணந்துறை காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.