இலங்கை

இலங்கை தொடர்பில் பிரபல ஆங்கில நடிகர் டிகெப்ரியோ வெளியிட்ட பதிவு

இலங்கையில் காட்டு யானைகளுக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டவசமான நிலைமை சம்பந்தமான சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை உலக புகழ் பெற்ற ஹொலிவூட் ஆங்கில திரைப்பட நடிகர் லியனாடோ டிகெப்ரியோ (Leonardo Dicaprio) டுவிட்டர் செய்தியாக பதிவிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் பள்ளக்காடு பிரதேசத்தில் சதுப்பு நிலப் பகுதி குப்பைகளால்  நிரப்படுவதாகவும் அந்த இடம் காட்டு யானைகள் வந்துச் செல்லும் இடம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக்கை உண்டதன் காரணமாக கடந்த வாரம் இரண்டு யானைகள் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அந்த இடத்தில் உள்ள குப்பைகளை உண்பதற்காக வரும் யானைகள், அடிக்கடி தமது கிராமத்திற்குள் வருவதாகவும் அந்த விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள தாம் தனிப்பட்ட ரீதியில் வீடுகளை சுற்றி மின்சார வேலிகளை அமைந்துள்ளதாகவும் பள்ளக்காடு பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் அஷ்ரப் நகர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கில திரைப்பட நடிகர் லியனாடோ டிகெப்ரியோ நடித்த 1997 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் (Titanic) திரைப்படம் உலக முழுவதும் திரையிடப்பட்டு வெற்றி பெற மிகப் பெரிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

ஐஎம்எப், உலக வங்கிகளின் அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டம்

Thanksha Kunarasa

மூன்று தடுப்பூசிகளையும் பெற்று கொண்ட பின்னர் கொரோனா ஏற்பட்டால் …

namathufm

யாழில் கலாசார மத்திய நிலையம் எதிர்வரும் 28 ஆம் திகதி திறப்பு!

namathufm

Leave a Comment