கொரோனாத் தொற்றின் ஐந்தாவது அலை, அதியுச்சத் தொற்றிற்குக் காரணமாகியது, மிக அவசரமாகப் பாடசதலைகளைத் திறந்ததுதான் என பிரான்சின் விஞ்ஞான ஆலோசனைக்குழு ஜனவரி 21ம் திகதி அறிக்கையில் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. தொடர்ந்து இந்த அறிக்கையில், «முக்கியமாக குழந்தைகள் காப்பகங்கள், பாலர் பாடசாலைகள், ஆரம்ப்பப் பாடசாலைகள், கொலேஜ்கள் என அனைத்திலும் கடுமையாக தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது. 15 வயதிற்குக் குறைவானவர்களிற்கே அதியுச்சத் தொற்றுப்பரவல் ஏற்பட்டுள்ளது. இது மாணவர்கள் ஆகும். அதே போல் அதளைத் தொடர்ந்து 30 முதல் 44 வயதுடையவர்களிற்கும் பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொற்று ஏற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஆகும்» «ஆகவே கொரோனத் தொற்றின் ஐந்தாம் அலையின் அதியுச்சப் பரவலிற்கு பாடசாலைகளை அவரசமாகத் திறந்தமை முக்கிய காரணமாகும்» என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது
previous post