பரிஸ் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து பராமரிக்கப்பட்டுவரும் போதைப்பொருள் அடிமையாளர்களை வேறு இடத்துக்கு அனுப்புவதற்கு காவல்துறையினர் தீர்மானித்துள்ளார்கள். இதற்கு பரிஸ் நகர முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்திலும், Seine-Saint-Denis மாவட்டத்திலும் பல போதைப்பொருள் அடிமையாளர்களை தங்கியுள்ளனர். இந்த போதைப்பொருள் அடிமையாளர்களால் அப்பகுதிகளின் வசிப்பவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், அவர்கள் பரிஸ் 12 ஆம் வட்டாரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
பரிஸ் காவல்துறை தலைமையகம் விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து, அவர்களுக்கான இடத்தினை SNCF தொடருந்து நிறுவனம் வழங்கியிருந்தது. மிக விரைவில், போதைப்பொருள் அடிமையாளர்கள் 12 ஆம் வட்டாரத்துக்கு மாற்றப்பட உள்ளனர். காவல்துறையினரின் இந்த முடிவுக்கு பரிஸ் நகர முதல்வர் Anne Hidalo எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
‘எவ்வித ஆலோசனைகளும் இன்றி எடுக்கப்பட்ட மோசமான முடிவு!’ என Anne Hidalo தெரிவித்துள்ளார்