தொடர்ந்து கொரோனாச் சாவுகளும் தொற்றுக்களும் உச்சம் நோக்கிச் சென்ற வண்ணமே உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வகங்களும் மருந்தகங்களும் மூடியிருக்கும் நிலையிலும் முழுமையான பெறுபேறுகள் கிடைக்காத நிலையிலும், ஞாயிறும் திங்களும் குறைந்தளவு தொற்று எண்ணிக்கை மட்டுமே கிடைக்கும நிலையிலும் கடந்த 24 மணிநேரத்தில் 108.481 பேரிற்குக் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஆரம்பித்ததில் இருந்து, பதினேழு மில்லியனை நெருங்கி 16.800.913 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த 24 மணிநேரத்தில் 393 பேர் சாவடைந்துள்ளனர். இதனுடன் பிரான்சில் மொத்தமாக 129.002 பேர் கொரோனாவினால் சாவடைந்துள்ளனர். ஒரு இலட்சத்தினையும் தாண்டி 101.723 பேர் வைத்தியசாலைகளிலும், 27.299 பேர் சமூக மற்றும் முதியோர் இல்லங்களில் சாவடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 29.748 பேர் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3.776 பேர் உயிராபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது அன்றாடம் பெருமளவில் அதிகரித்துச் செல்கின்றது. தேசிய அளவிலான தொற்று விகிதமானது, திடீரென பெரும் உச்சமடைந்து 100.000 பேரிற்கு 50 இனைத் தாண்டினாலே பெரும் எச்சரிக்கை நிலை எனும் நிலையில், உச்ச ஆபத்தாக நாளிற்கு நாள் அதிகரித்து 100.000 பேரிற்கு 3.675 என்ற விகிதத்தில் உள்ளது. நாளிற்கு நாள் அதிகரித்து, வைத்தியசாலைகளின் அழுத்தம் 75 சதவீதமாக உச்சமடைந்துள்ளது