கொடிகாமம் – கலப்பு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை சிறிலங்கா இராணுவம் கைது செய்ய முயன்ற வேளை, அகழ்வில் ஈடுபட்டோர் தப்பிச் செல்ல முயன்ற சமயம் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மீது 6 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த உழவு இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டபோதும், ஏனையோர் தப்பி ஓடியதாகத் தெரியவருகின்றது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியும் இராணுவத்தினரால் கொடிகாமம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.