உக்ரைன் பிணக்கில் ரஸ்யாவிற்கு எதிராக நடாத்தப்படும் உயர்மட்டச் சந்திப்பில் இன்று இரவு எமானுவல் மக்ரோன் கலந்து கொள்ள உள்ளார். உக்ரைன் மீது படையெடுத்துத் தாக்குதல் நடாத்த ரஸ்யப் படைகள் தாயர் நிலையில் இருக்கும் வேளையில், உக்ரைன் பிணக்கில் தலையிட சந்தர்ப்பம் பார்த்து இருந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்துள்ளார். இதில் மக்ரோன் உட்படப் பல ஐரோப்பியத் தலைவர்கள் சந்திக்க உள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவி உர்சுலா வொன் லெயன், ஆணைய கலந்தாய்வின் தலைவர் சார்ள் மிசேல், ஜேர்மணியின் அதிபர் ஓலாவ் சொல்ஸ், இத்தாலியப் பிரதமர் மரியோ த்ராகி, நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஜென் ஸ்டொல்டன்பேர்க், போலந்தின் ஜனாதிபதி ஆந்ரெய் தூதா, பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆகியோருடன் பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனும் கலந்து கொள்கின்றார். இந்தத் தகவலை எலிசே மாளிகை தெரிவித்துள்ளது
previous post