உலகம் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் முடக்கப்பட்ட இணையத்தளங்கள்!!

பிரான்சில் சில இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gerald Darmanin அறிவித்துள்ளார்.

‘பிரிவினைவாதத்தை தூண்டும்’ சில இணையத்தளங்களே முடக்கப்பட்டுள்ளன. “இஸ்லாமிய அடிப்படைவாதத்தினை பேசும், பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் மற்றும் ஜிகாதி பயங்கரவாதத்துக்கு ஆதரவான இணையத்தளங்களே முடக்கப்பட்டுள்ளன!” என உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து மறைமுக பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்த சில இணையத்தளங்களும் இதில் உள்ளன.

La voie droite எனும் இணையத்தளம் இதில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இதில் ஒலி கோப்புகள் மூலமாக வகுப்புகள் இடம்பெறுவதாகவும், அவை அனைத்துமே மிக ஆபத்தான பிரச்சார நோக்கோடு மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் மேலும் அறிய முடிகிறது.

அண்மையில், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பிரச்சாரமாக மேற்கொண்ட Pantin நகர பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டது. அதில் இஸ்லாமிய மத போதகராக இருந்த Ibrahim Doucoure என்பவர் மேற்படி இணையத்தளத்துடன் தொடர்புபட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இது உட்பட பிரான்சில் பத்துக்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப முடக்கப்பட்டுள்ளது

Related posts

ஜிம்பாப்வேயில் பேருந்து விபத்து: 35 பேர் பலி

Thanksha Kunarasa

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Thanksha Kunarasa

தென் கொரியாவில் ஒரேநாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment