இலங்கை

ஜனாதிபதி மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை! மஹா சங்கத்தினர் பெருமிதம்

அதலபாதாளத்துக்கு சென்றுகொண்டிருந்த நாட்டையும் தேசத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றக் கூடிய ஒரே தலைவர் கோட்டாபய ராஜபக்ச என மஹா சங்கத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பௌத்த ஆலோசனை சபையின் 12ஆவது கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அதலபாதாளத்துக்கு சென்றுகொண்டிருந்த நாட்டையும் தேசத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றக் கூடிய ஒரே தலைவர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ச மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை.

ஜனாதிபதி பொறுமையுடனும் நன்கு திட்டமிடப்பட்ட வகையிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரதிபலன்கள் தற்போது யதார்த்தமாகி வருகின்றன.

கோவிட் தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கவும் சவால்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கும், ஜனாதிபதி மேற்கொண்ட பங்களிப்பிற்கு பாராட்டுக்கள்.

மேலும்,தொலைநோக்குப் பார்வையும் நடைமுறைச் சிந்தனையும் கொண்ட தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஒன்றிணைவது அனைத்துத் தரப்பினரினதும் பொறுப்பு என மஹா சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்

Related posts

இலங்கை நாணயத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Thanksha Kunarasa

அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொடூரமாக கொலை

Thanksha Kunarasa

13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை பா.ஜ . கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை  தெரிவிப்பு !

namathufm

Leave a Comment