பல்பொருள் அங்காடிகளில் கொரோனா சுய பரிசோதனை கருவிகள் விற்பனை செய்ய வழங்கப்பட்டுள்ள அனுமதி நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ள அனுமதி பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இம்மாதம் ஜனவரி 31 ஆம் திகதி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
‘கொரோனா சுய பரிசோதனை கருவிகளின் தேவை அத்தியாவசியம் ஆகியுள்ளது. இதனால் இந்த விற்பனையை விதிவிலக்காக அனுமதிக்க வேண்டி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு இந்த அனுமதி நீடிக்கப்பட்டுள்ளது!’ என இன்று வெளியான அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.