உலகம்

கனடாவில் காணாமல்போன தமிழ் சிறுவன்: கண்டுபிடிக்க திணறும் பொலிஸார்

கனடாவில் தமிழ் சிறுவன் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சிறுவனை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு வில்லிம்பரி நகரத்தினை சேர்ந்த 15 வயதுடைய ஆதித்யா வசந்தன் எனும் சிறுவனே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

இந்நிலையில்,யோர்க் பிராந்திய பொலிஸார் தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.

ஆதித்யா வசந்தன், கடைசியாக, ஜனவரி 20, 2022, வியாழன் அன்று காலை 11 மணியளவில், மார்க்கம் நகரின் 16வது அவென்யூ மற்றும் மார்க்கம் வீதி பகுதியில் அமைந்துள்ள அவரது பாடசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கு பின்னர் குறித்த சிறுவன் வீடு திரும்பவில்லை எனவும்,சிறுவன்ஆதித்யா வசந்தன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1-866-876-5423, ext.7541 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

Related posts

ஜெருசலேமில் அல்- அக்ஸா மசூதியில் பயங்கர மோதல்- பலர் படுகாயம்

Thanksha Kunarasa

அணு ஆயுதத் தாக்குதல் பற்றி நேட்டோ அணி நாடுகளுடன் அமெரிக்கா விவாதிக்கும்!!

namathufm

உக்ரைன் தலைநகரிலிருந்து ரஷ்ய படை வௌியேறியது – பென்டகன்

Thanksha Kunarasa

Leave a Comment