இலங்கை

“என்னை சிறைப்படுத்த முடியாது” -முன்னாள் ஜனாதிபதி உறுதி!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னை சிறைப்படுத்த முடியாது எனவும், தன்னை சிறைப்பிடிப்பதற்கான காரணங்களோ அல்லது சாட்சிகளோ இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தன்னை சிறைப்படுத்தப் போவதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானைவை எனவும் தவறான தகவல்கள் பரவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவே அவர் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய அவரே நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில் இன்று ஆளும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள், மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தன்னை சிறைப்படுத்த முடியாது என உறுதியாக தெரிவித்தார்.

Related posts

நாளை கொழும்பில் மாபெரும் போராட்டம்!

Thanksha Kunarasa

இலங்கையை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற களமிறங்கிய தமிழர்கள்

Thanksha Kunarasa

முல்லைத்தீவு சிகை அலங்கார சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு.

namathufm

Leave a Comment