கடந்த 24 மணிநேரத்தில் அரை மில்லியன் பேருக்கும் அதிகமானோருக்கு பிரான்சில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு புதிய சாதனையாகும். கடந்த செவ்வாய்கிழமை 464,769 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தமையே இதுவரை நாள் ஒன்றில் பதிவான அதிகபட்ச தொற்றாகும். இந்நிலையில், இன்று இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 525,527 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சற்று முன்னர் பிரதமர் Jean Castex மற்றும் சுகாதார அமைச்சர் Olivier Veran மேற்கொண்ட ஊடக சந்திப்பில் பல தளர்வுகளை அறிவித்திருந்தனர். மீண்டும் இரவு விடுதிகள், டிஸ்கொதே விடுதிகள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக அவர்கள் அறிவித்தனர். இந்நிலையிலேயே இதுவரை இல்லாத அளவு கொரோனா தொற்று பிரான்சில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது