பெந்தோட்டையில் நட்சத்திர தரப்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றின் 42 ஊழியர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 45பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெந்தோட்டை இந்துருவ சுகாதார வைத்திய அதிகாரி இன்று ஓர் அறிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து ஹோட்டல் ஊழியர்களும் மருத்துவ ஆலோசனையின் பேரில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மீதமுள்ள ஊழியர்கள் பிசிஆர் சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.