இலங்கை

இலங்கையில் நாளாந்தம் 4 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்

இலங்கையில் நாளாந்தம் 4 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய அபாயம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் சில மாதங்களுக்குள் அமெரிக்க டொலர் கடனைப் பெற இலங்கை தவறினால், சுமார் 04 மணித்தியாலங்கள் தினசரி மின்வெட்டு நீடிக்கும் வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விடயத்தில் தேவையான தியாகங்களை செய்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும், அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக தியாகங்களைச் செய்து வழிவகுக்க வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறைந்த பட்சம் ஏப்ரல் மாதம் பருவமழை தொடங்கும் வரையில் தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பில் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.

மழைக்காலம் வரை நாட்டில் எரிபொருளை பயன்படுத்தியே மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான இந்த முயற்சியின் அடிப்படையில், பெரிய கடனைப் பெறாவிட்டால் மார்ச் மாதத்திற்குள் சுமார் 04 மணி நேர தினசரி மின்வெட்டை அமுல்படுத்த வேண்டும்.

Related posts

வாழைக்காய்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை !

namathufm

‘சீதாவக ஒடிஸி’ என்ற பெயரில் புதிய ரயில் சேவை !

namathufm

மேல் மாகாணத்திலுள்ள கத்தோலிக்க பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்

Thanksha Kunarasa

Leave a Comment