இந்தியா

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பெற்றுள்ளார்.

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை ‘தி மோர்னிங் கொன்சல்ட்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இதன்படி, உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 71 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவின் ஜனாதிபதி எண்ட்ரஸ் இமானுவேல் லோபஸ் 66 சதவிகித பேர் ஆதரவுடன் 2-வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதில் 43 சதவிகிதம் ஆதரவு பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் 26 சதவிகிதம் ஆதரவை பெற்று 13-வது இடத்தில் உள்ளார்.

தி மோர்னிங் கொன்சல்ட் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு 84 சதவிகிதம் ஆதரவு கிடைத்தது.

அதேபோன்று கடந்த ஆண்டு மே மாதத்தில் 63 சதவிகிதமாக சரிந்த அவருடைய ஆதரவு தற்போது 71 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

2022, ஜனவரி 13-ஆம் திகதி முதல் 18 ம் தேதி வரையில் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது

Related posts

துபாய் மாநாட்டில் ரூ.1600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்- தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

Thanksha Kunarasa

இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்கு படகு சேவை!

namathufm

புச்சா படுகொலைக்கு இந்தியா கண்டனம்

Thanksha Kunarasa

Leave a Comment