இலங்கை

பிற்போடப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எதிர்வரும் வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட வேண்டும்.

எனினும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால் அவரால் தேர்தலை பிற்போடுவது தொடர்பான வர்த்தமானியை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தலை பிற்போடுவதற்கான இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி மற்றுமொரு அமைச்சுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மற்றுமொரு அமைச்சின் ஊடாக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஆர்ப்பாட்டக்களத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

Thanksha Kunarasa

ஹப்புத்தளையில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்.

namathufm

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார்

Thanksha Kunarasa

Leave a Comment