சினிமா

தேயிலை காடு இறுவெட்டு வெளியீடு விழா

வித்யா சமூக அபிவிருத்தி நிறுவனம் பெருமையுடன் வழங்கிய தேயிலை காடு இறுவெட்டு வெளியீடு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை (19) கொழும்பு, ஜிந்துப்பிட்டி, விவேகானந்த சபை மண்டபத்தில் நடைப்பெற்றது.

எஸ். தவராசாவின் இசை, வரிகள் மற்றும் இயக்கத்தில் அமையப் பெற்றுள்ள இந்தப் பாடலை, டி. அமரதாஸுடன் எஸ். க்ரித்திக்கா இணைந்து பாடியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேசன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிரகாஷ் கணேசன் கௌரவ அதிதிகளாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இசையமைப்பாளர்களான சுருதிபிரபா, கருப்பையா பிள்ளைபிரபாகன், கொழும்பு நகரசபை உறுப்பினர் பாலசுரேஸ், கேசவன் பத்மநாதன் (தொழிலதிபர்) எழுத்தாளர் ராதா மேத்தா, வத்தளை நகரசபை உறுப்பினர் சசிகுமார்  உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

ரஜினி சாதனையை தகர்த்த யஷ்

Thanksha Kunarasa

சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!

editor

மீண்டும் ரஜினி – வடிவேலு கூட்டணி!

Thanksha Kunarasa

Leave a Comment